×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஜன.9 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து அமைச்சர் தெரிய்வத்துள்ளதாவது; “சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு மையங்கள், கோயம்பேட்டில் 1 முன்பதிவு மையம் அமைக்கப்படும்

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம். பயணிகள் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக 15,188 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து திரும்பும் பயணிகளுக்காக ஜன.16 முதல் 19 வரை மொத்தமாக 25,008 பேருந்துகள் இயக்கம்.

பொங்கலுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, OMR, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம்” அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 11.35 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tags : Pongal festival ,Minister ,Sivasankar ,Chennai ,
× RELATED போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை...