×

போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

 

சென்னை: போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜன.6க்கு பிறகு மருத்துவ காரணங்களை தவிர விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஜன.5ம் தேதிக்கு பிறகு பணிக்கு வராத ஆசிரியர்களின் பட்டியல்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : Department of Education ,Chennai ,
× RELATED அறிவுப் புரட்சிக்கு நாம்...