சென்னை: சென்னையில் இருந்து 1,140 கி.மீ தெற்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து 990 கி.மீ தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. முன்னதாக மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகம் குறைந்தது.
