×

மூடோடு பகுதியில் சாலையில் ஜல்லி குவியல்: வாகன ஓட்டுனர்கள் அவதி

அருமனை: உத்திரங்கோடு – மஞ்சாலுமூடு சாலையில் மூடோடு பகுதியில் 5 நாட்களுக்கும் மேலாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு குவியலாக காணப்படுகிறது. இந்த ஜல்லி குவியலால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. தற்போது ஜல்லியின் ஒரு பகுதி சாலை முழுவதும் பரவி காணப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக இந்த கற்களை யார் கொட்டியது என அருமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இப்பகுதி குப்பை கொட்டுவது, சாலை பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்களை இறக்கிவிடும் ஒரு தளமாக மாறி வருகிறது.

இதனால் சாலை பழுதடைவது மட்டுமல்லாமல் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளது. குறிப்பாக இரவு வரும் இருச்சக்கர வாகன ஓட்டுனர்கள் இந்த கற்களில் மோதி கீழே விழும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதற்கு யார் காரணம் என்பது தற்போது மர்மமாகவே உள்ளது. இவர்கள் ஜல்லி கற்களை அள்ளும் வரை காத்திருந்து கைது செய்ய இயலுமா என்ற கேள்வியும் போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mudodu ,Uttarangodu ,Manjalumudu Road ,
× RELATED திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில்...