×

சூதாடிய 4 பேர் கைது

ஈரோடு, ஜன.3: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீசார் நேற்று முன்தினம் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சீலம்பட்டி ஏரி, மாரியம்மன் கோயில் அருகில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (40),ஆனந்தன்(37),இளையப்பன்(34),லோகு (42) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் சூதாட பயன்படுத்திய சீட்டுக்கட்டு மற்றும் சூதாட்ட பணம் ரூ.820 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

 

Tags : Erode ,Ammapettai police ,Seelampatti Lake ,Mariamman Temple ,
× RELATED மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்...