×

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

ஈரோடு, ஜன. 1: ஈரோடு மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டியும், வாணம் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

இதில், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச் புத்தாண்டையொட்டி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு புத்தாண்டு பிறப்பை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் மணிகாட்டியும் வைக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டு பிறந்ததும் அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர்.

மேலும், ஈரோடு மாநகரில் பல்வேறு வீதிகளில் புத்தாண்டினை கொண்டாடும் விதமாக வண்ண காகித தோரணங்களை தொங்க விட்டும், சாலைகளில் ‘ஹேப்பி நியூ இயர்-2026’, ‘இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்’ போன்ற வாசகங்கள் எழுதி வாழ்த்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். இதில் ஒரு சில பகுதிகளில் ஒலிபெருக்கிகளை சாலைகளில் வைத்து சினிமா பாடல்களை ஒலிக்க செய்து உற்சாகமாக நடனமாடியும் மகிழ்ந்தனர்.

அப்போது, அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார், யாருக்கும் இடையூறு இல்லாமல் புத்தாண்டினை கொண்டாட அறிவுறுத்தி சென்றனர். புத்தாண்டு பிறப்பையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள பல்வேறு கோயில்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், கோயிலின் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டு சென்றனர்.

Tags : English New Year ,Erode ,CSI Church ,Panneerselvam Park ,
× RELATED மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்...