×

கொடுமுடி பெண் தாசில்தார் திடீர் மரணம்

கொடுமுடி, ஜன.1: ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் கொடுமுடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்து வந்த பாலமுருகாகி (49) நேற்று உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் மதுரை மாவட்டம் அனுப்பானடி பொன்னுப்பிள்ளை தோப்பைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்பு நிலை பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று முதுநிலை வருவாய் ஆய்வாளராக பெருந்துறை வட்டத்தில் பணியில் சேர்ந்தார்.

அதன்பின், பதவி உயர்வால் துணை வட்டாட்சியாக பணிபுரிந்து வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து முதல் வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று கொடுமுடி வருவாய் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார். தற்போது கொடுமுடி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார். இவரின் மறைவிற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர்.

Tags : Kodumudi ,Balamurukaki ,Kodumudi taluk, Erode district ,Ponnupillai Thop, ,Anupanadi, Madurai district ,Tamil Nadu ,
× RELATED மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்...