முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் வயது முதிர்ந்தோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள்

அரியலூர், ஜன.3: அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் நாளை மற்றும் 5ம்தேதி விநியோகம் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை, பருப்பு, ஆயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23288 குடும்ப அட்டைதாரர்களுக்கு, இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி 2026 மாதத்தில் நாளை மற்றும் 5ம்தேதி ஆகிய இருநாட்கள் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் மேற்கண்ட நாட்களில் ரேஷன் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: