கொள்ளிடம் அருகே உடைந்த குடிநீர் குழாயை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம், ஜன.3: கொள்ளிடம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம். கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் புத்தூரில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது.

பல கிராமங்களுக்கு செல்லும் முக்கிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், உடைப்பு வழியே சாலையின் மேல் பகுதியில் உள்ள அழுக்கடைந்த மாசுபட்ட தண்ணீரும் கலந்து செல்ல வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பூமிக்கு அடியில் புத்தூரில் சென்று கொண்டிருக்கும் இந்த குடிநீர் குழாயை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய குழாய் பொருத்தி சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: