பாட்னா: பீகாரில் பல்வேறு குற்ற வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த நக்சல் மலகர் தலைக்கு போலீசார் ரூ.50ஆயிரம் சன்மானம் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் பெகுசராய் மாவட்டத்தின் தேக்ரா பகுதியில் பதுங்கியிருந்த மலகர் சுட்டுக்கொல்லப்பட்டார். மலகரின் 2 கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
