×

புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்: 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்

திருவனந்தபுரம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர். இரவு நடை சாத்துவதற்கு முன் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே 35 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் பெருமளவு பக்தர்கள் குவிந்தனர். நேற்று முன்தினம் மாலைக்குப் பின்னர் வந்த பக்தர்கள் நேற்று காலை தரிசனம் செய்த பிறகே திரும்பினர். நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் வரிசை மரக்கூட்டம் பகுதியையும் தாண்டி சரங்குத்தி வரை காணப்பட்டது.

நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். 3 நாளில் 2.50 லட்சம் பக்தர்கள் தரிசனம்: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். நேற்று இரவு வரை இரண்டரை லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.

Tags : Sabarimala ,New Year's Eve ,Thiruvananthapuram ,English New Year ,Sabarimala Ayyappa temple ,Makaravilakku ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...