பந்தலூர், ஜன.1: அறிவியல் போற்றதும் நிகழ்வு 2.0 வானவில் மன்றம் அனைத்து அரசு பள்ளிகளிலும் இயங்கி வரும் நடமாடும் ஆய்வகமாகும்.தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை காலங்களில் அறிவியல் போற்றும் நிகழ்வு கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டார கிராமங்களில் கொண்டாடப்படுகிறது.
அறிவியலை போற்றும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நேற்று முன்தினம் பொக்காபுரம் பகுதியில் நடைப்பெற்ற நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் கவிதா துவக்கி வைத்தார். நிகழ்வில் வானவில் மன்ற கருத்தாளர்கள் ஷாலினி, ஜெய,அர்ச்சனா ஆகியோர் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு சில அறிவியல் பரிசோதனைகள் அமில-கார நிறங்காட்டிகள், வேதியியல் பச்சோந்தி, நீல நிற பாட்டில், தெர்மோமீட்டர், மைக்ரோஸ்கோப் பற்றியும் அதனை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கினர். இதில், மாணவர்கள் ஆர்வமுடன் பரிசோதனைகள் செய்து காட்டி அசத்தினர்.
