×

பகுதிநேர நூலகத்தை முழு நேர நூலகமாக மாற்ற கோரிக்கை

கூடலூர், ஜன. 1: கூடலூரை அடுத்த தேவாலா பகுதியில் கிளை நூலகம் பகுதி நேர நூலகமாக செயல்பட்டு வருகிறது. நூலகத்தை ஒட்டி தேவாலா நகர சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள், கர்ப்பிணிகள் தினசரி வந்து செல்கின்றனர். இவ்வாறு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக வரும், நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரத்தில் பயன்பெறும் வகையில் இந்த நூலகத்தை முழுநேர நூலகமாக திறந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நூலகத்தில் தற்போது 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்து உள்ளனர். பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை முழுநேர நூலகமாக திறந்து செயல்படுத்தினால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவோர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவ மாணவிகள் உட்பட பலரும் பயன்பெறுவார்கள். எனவே நூலகத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து முழுநேர நூலகமாக செயல்படுத்த வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gudalur ,Devala ,Devala City Health Center ,
× RELATED அறிவியல் செயல்பாடு குறித்து விளக்கம்