×

பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு..!

சென்னை: தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழுநீளக் கரும்பு ஆகியவற்றை ரூ.248,66,17,959 ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை:
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் கடிதத்தில் 2026ம் ஆண்டின் தமிழர் திருநாள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 21ம் தேதி நிலவரப்படி 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு வழங்கிடும் பட்சத்தில் தோராயமாக ரூ.248,66,17,959 செலவினம் ஏற்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1 கிலோ பச்சரிசி ரூ.25 வீதம், ரூ.55,72,92,750ம், சர்க்கரை 1 கிலோ ரூ.48.549 வீதம், ரூ.108,22,40,229, ஒரு முழு நீளக் கரும்பு போக்குவரத்து செலவு மற்றும் வெட்டு கூலி உள்பட 1 எண்ணம், தோராயமாக ஒரு கரும்பின் விலை ரூ.38 வீதம் ரூ.84,70,84,980 என மொத்தம் ரூ.248,66,17,959 ஆகும்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநரின் கருத்துரு மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதனை ஏற்று 2026ம் ஆண்டு தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுநீளக் கரும்பு ஆகியவற்றை மொத்த செலவினத் தொகை ரூ.248,66,17,959 கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மூலம் 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு விநியோகம் செய்வதற்கு நிர்வாக அனுமதியும் மற்றும் நிதி ஒப்பளிப்பும் வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Thai Pongal festival ,Tamil Nadu government ,
× RELATED திருப்பூர் சொர்க்க வாசல் திறப்பு...