மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1,200 கனஅடியாக சரிந்துள்ளது. இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 708 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 604 கனஅடியாக சரிந்துள்ளது.அணையின் நீர்மட்டம் 104.76 அடியாகவும், நீர் இருப்பு 71.14 டிஎம்சியாகவும் உள்ளது.
