×

100 நாள் வேலை இழந்தவர்களின் கண்ணீர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடியை சும்மா விடாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

அம்பத்தூர்: 100 நாள் வேலை இழந்தவர்களின் கண்ணீர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடியை சும்மா விடாது, என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் வடக்கு பகுதி சார்பில் பாக முகவர்கள் மற்றும் பாக இளைஞரணி, சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அம்பத்தூர் எம்எல்ஏவும், அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளருமான ஜோசப் சாமுவேல் தலைமை தாங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘100 நாள் வேலை திட்டத்தில் திமுக குழப்புகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது தான் எதிர்கட்சித் தலைவரின் வாடிக்கை. 100 நாள் வேலை திட்டம் பறிபோய் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் வடிக்கின்ற கண்ணீர் 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சும்மா விடாது. நூறு நாள் வேலை திட்டம் மாற்றம் தொடர்பாக நாடே கொதித்தெழும்போது பட்டை தட்டி முட்டு போடுகின்ற எதிர்க்கட்சி தலைவரின் போக்கை மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர், என்றார்.

Tags : Edappadi ,Minister ,P.K. Sekarbabu ,Ambattur ,Chennai East District ,Ambattur North ,
× RELATED கொடுத்த வாக்குறுதி, கடமையிலிருந்து...