சென்னை: மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:
‘கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை அங்கீகாரமின்றி கொட்டுவதை கண்டறியப்பட்ட உடனே குற்றத்தில் ஈடுபட்ட வாகனம் அமலாக்கத்துறையினரால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். கட்டுமானக் கழிவுகளின் அளவை அடிப்படையாக கொண்டு ஒரு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த நிலையான நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதுடன், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் கட்டாயமாக அமல்படுத்தப்படும். அனைத்து கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், வாகன இயக்குனர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கட்டிடம் மற்றும் இடிபாடு கழிவுகளை சென்னை மாநகராட்சி ஒதுக்கியுள்ள மையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இதனை மீறுவோருக்கு எந்த விதிவிலக்கும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
