திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஜனவரி 2ம் தேதி வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. வெள்ளி தேர் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜன.2ல் மாலை 6.30 மணிக்கு வெள்ளோட்டம் நடைபெறுகிறது. 35 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோயிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 1991ல் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வெள்ளித்தேர் சேதமடைந்த நிலையில் திமுக ஆட்சியில் சீரமைக்கப்பட்டுள்ளது.
