*லட்சுமணன் எம்எல்ஏ வழங்கினார்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு லட்சுமணன் எம்எல்ஏ நிவாரண உதவிகளை வழங்கினார்.விழுப்புரம் அருகே வளவனூர் வாணியசத்திரம் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன். இவரின் வீடு எரிந்து சேதமானதை அறிந்த திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான லட்சுமணன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவரது குடும்பத்துக்கு காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கிய லட்சுமணன் எம்எல்ஏ அரசு தொகுப்பு வீடு கட்டித்தரவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் கண்ணப்பன், வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா, வளவனூர் பேரூராட்சி செயலாளர் ஜீவா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், துணை தலைவர் அசோக், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், பொருளாளர் ரகுமான், வார்டு செயலாளர் ராஜா சம்பத், கவுன்சிலர்கள் வடிவேல், பார்த்திபன், செந்தில், நவினாஸ் பாஸ்கர், கபிரியேல், நகர இளைஞர் அணி அமைப்பாளர் முருகன், நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜேஷ், மணி, சற்குனராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி துணை அமைப்பாளர்கள் தொல்காப்பியன், ராவணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராம், நகர ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பிரகதீஸ்வரன், நகர மாணவர் அணி அமைப்பாளர் சுகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கோபிநாத், மோகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
