- சீமான்
- விஜய்
- பாஜக
- திருமாவளவன்
- திருச்சி
- ஆர்எஸ்எஸ்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி
- திருச்சி விமான நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திருச்சி: சீமான், விஜய் அரசியல் போக்கும், செயல்பாடும் பாஜ, ஆர்எஸ்எஸ்-க்கு துணை போவதாக உள்ளது என்று திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் பாஜ இந்தளவிற்கு ஆட்டம் போட காரணமே அதிமுக தான். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக இல்லாமல் போய்விடும் என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள். தமிழ் மண்ணில் பெரியார் அரசியலே இல்லாமல் போகும்.
நான் பெரியாரின் பிள்ளை, அம்பேத்கரின் பிள்ளை, சனாதான சக்திகளுக்கு துணை போக்கும் வகையில் சீமானும், விஜயும் செயல்படுகிறார்கள் என்பதை கூறாமல் இருக்க முடியாது. அவர்களின் அரசியல் போக்கும், செயல்பாடும் பாஜ, ஆர்எஸ்எஸ்-க்கு துணை போவதாக இருக்கிறது என்பது தான் எதார்த்தமான உண்மை. இதனை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவ மக்களின் தாக்குதலை பற்றி இதுவரை விஜய் வாய் திறந்து உள்ளாரா? கொள்கை எதிரி என்றால் கொள்கை ரீதியாக விமர்சிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறதா இல்லையா? அவர்களை கண்டிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இடையே அப்படி ஒரு உறவு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
