×

வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் சென்னையில் 29 விமானங்கள் தாமதம்: பயணிகள் தவிப்பு

சென்னை: வடமாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று 17 புறப்பாடு விமானங்கள், 12 வருகை விமானங்கள் என மொத்தம் 29 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரையில் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கவுகாத்தி, விஜயவாடா, ஐதராபாத், செகந்திராபாத், லக்னோ, மும்பை, சீரடி, கோவை, திருச்சி, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 விமானங்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

அதேபோல் சென்னைக்கு வரவேண்டிய விமானங்களான புனே, கொல்கத்தா, டெல்லி, செகந்திராபாத், ஐதராபாத், கவுகாத்தி, கோவை, அந்தமான், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 12 வருகை விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்ந்தன. இதேபோல் வடமாநிலங்களில் நிலவும் பனிமூட்டங்கள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று மொத்தம் 29 விமானங்கள் தாமதமானது.

Tags : northern states ,Chennai ,Chennai airport ,
× RELATED கூட்டணி இன்னும் அமையாததால் விரக்தி...