×

பெங்களூருவில் 400 வீடுகள் அகற்றிய விவகாரம் கர்நாடகா, கேரளா முதல்வர்கள் மோதல்

பெங்களூரு: ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடர்பாக கர்நாடகா, கேரளா முதல்வர்கள் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு, பேட்ராயனபுரா தொகுதி பகீரா காலனி மற்றும் வசீம் லே அவுட்டில் மாநகராட்சி நிலத்தில் சுமார் 400 பேர் குடிசை அமைத்து வசித்து வந்தனர். அதில் வசித்த நபர்களுக்கு எவ்வித நோட்டீஸ் அனுப்பாத நிலையில் பெங்களூரு பெருநகர மாநகராட்சி(ஜிபிஏ) நிர்வாகம் திடீரென்று அகற்றியது.

இந்த நடவடிக்கைக்கு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் அவரின் எதிர்ப்பை பதிவு செய்தார். கர்நாடக அரசு ஏழைகளின் வீட்டை இடித்து தள்ளியுள்ளது. இந்த புல்டோசர் நடவடிக்கையை கண்டிக்கிறோம் என கூறியிருந்தார். கேரள முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு கர்நாடகா துணை முதல்வர் டிகேசிவகுமார் பதில் அளித்து கூறுகையில்,’

பெங்களூருவில் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளதால் சிறுபான்மையினரை நில மாபியா பயன்படுத்தி குடிசை பகுதிகளை ஏற்படுத்தும் முயற்சியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதே நேரம் கேரள முதல்வர் பினராய் விஜயன் இது பற்றி எதுவும் தெரியாமல் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மூலமாக இது பற்றிய விபரம் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளது.

அது மட்டும் இன்றி அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்படும். முதல்வர் சித்தராமையா இது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுப்பார். எனவே தேவையில்லாமல் கர்நாடக மாநில விவகாரங்களில் கேரள முதல்வர் தலையிட வேண்டாம்’ என்றார். டெல்லியில் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில்,’ பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ஒரு அவசியமான நடவடிக்கை’ என்றார்,

Tags : Karnataka ,Kerala ,Bangalore ,Bangalore, ,Badrayanapura ,Bakira Colony ,Waseem Lay ,
× RELATED உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து...