×

ராகுல், பிரியங்கா, கார்கே விரைவில் தமிழகம் வருகை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே விரைவில் தமிழகம் வர உள்ளனர். சட்டசபை தேர்தல் தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அளித்த பேட்டி: இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவிலே உச்சப்பட்சமாக எவ்வளவு கொடூரமாக தாக்குதல் நடத்த முடியுமோ அந்த அளவுக்கு பாஜ ஆளும் மாநிலங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் என்பது சிறுபான்மையினர் மீதோ, தேவாலயங்கள் மீதோ நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை. இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். தொடர்ந்து மோடி அரசு இதை செய்து வருகிறது. இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட வன்முறைகள் நடக்காமல் இருக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். எஸ்ஐஆர் எப்படி பீகாரிலே இறந்தவர்களை எல்லாம் அழைத்து வந்து எங்கள் தலைவர் ராகுல் தேநீர் சாப்பிட வைத்தாரோ?, அதே போன்று மடிப்பாக்கம் பகுதியில் உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

தகுதியான எல்லாருக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும். தகுதியற்றவர்களுக்கு வாக்குரிமை அளிக்க கூடாது. ஆக இந்த அடிப்பையில் தேர்தல் ஆணையம் மிக தெளிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வர இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு பல்வேறு குழுக்களை நியமித்து உள்ளோம். வேலைகளை ஆரம்பித்து இருக்கிறோம்.

பீகாரில், மகாராஷ்டிராவில் கூட்டணி பேசும் போது பிரச்னை வந்து. எங்கே பிரச்னை வந்தது என்றால், கடைசி நேரத்தில் தொகுதிகளை ஒதுக்கினார்கள். இதனால் வேட்பாளர் தேர்வில் தொய்வு ஏற்பட்டது. அதை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று தான் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்பே இந்த பேச்சுவார்த்தையை எல்லாம் முடித்து விட்டால் தேர்தல் பிரசாரத்திற்கு வருவதும், மாநாட்டிற்கு தலைவர்கள் வருவதற்கும், ஏற்பாடு செய்வதற்கும் சரியாக இருக்கும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

அதனால், நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். பல முறை சொல்லியிருக்கிறோம். இந்தியாவை வழிநடத்த போவது இந்தியா கூட்டணி தான். எல்லா மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் ஓரிரு நாளில் வரலாம்.

Tags : Rahul ,Priyanka ,Karke ,Dimuga ,Tamil Nadu ,Congress ,president ,Wealvapalundaga ,Chennai ,Mallikarjuna Karke ,Richly ,Dimuka ,Selvaapperundagai ,Sathyamurthi Bhavan ,
× RELATED உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து...