×

புத்தாண்டு ரெய்டு டெல்லியில் 1,306 பேர் கைது: 21 துப்பாக்கி, 6 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுடெல்லி: ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், டெல்லியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நேற்று முன்தினம் இரவு நடந்த ரெய்டில் மட்டும் மொத்தம் 1,306 பேர் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் 21 நாட்டுத் துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் 27 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சுமார் 12,250 மதுபான பாட்டில்கள் மற்றும் 6 கிலோ கஞ்சாவும் சிக்கியது. இதுதவிர திருடப்பட்ட 310 செல்போன்கள், 231 இருசக்கர வாகனங்கள் மற்றும் சுமார் 2.3 லட்சம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

Tags : New Year ,Delhi ,New Delhi ,English New Year ,
× RELATED உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து...