மங்களூரு: பெரியவர்கள் சிரமமின்றி ஆதார் சேவைகளைப் பெறும் வகையில், நாடு முழுவதும் முழு நேர சேவை மையங்களின் எண்ணிக்கையை 473 ஆக உயர்த்த யுஐடிஏஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 88 முழுமையான ஆதார் சேவை மையங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் யுஐடிஏஐ தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ் குமார், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் ஆதார் மையங்களின் எண்ணிக்கையை 473 ஆக உயர்த்த உள்ளதாகத் தெரிவித்தார்.
