முத்துப்பேட்டை, டிச. 27: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பாண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பனை விதை நடும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு தலைமை வகித்தார். இதில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை நாகை எம்பி செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர். பிபி நினைவு கொடி கம்பத்தில் கட்சி கொடியை மூத்த உறுப்பினர் தெட்சிணாமூர்த்தி ஏற்றினார்.
தொடர்ந்து 100ம் ஆண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஜனசக்தி ஆண்டு மலர், காலண்டர் விற்பனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் யோகநாதன், மார்க்ஸ், மீனாம்பாள், விவசாய சங்க செயலாளர் சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சிவச்சந்திரன், மாதர் சங்க செயலாளர் பரிமளா, ஏஐஒய்எப் செயலாளர் பாலமுருகன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
