மன்னார்குடி, டிச. 27: மன்னார்குடியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மன்னார்குடி செயற்பொறியாளர் (பொ) சம்பத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மன்னார்குடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்நாள் கூட்டம் வரும் செவ்வாய்கிழமை (டிசம்பர் 30) காலை 11 மணியளவில் திருவாரூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் லதா மகேஸ்வரி தலைமையில் மன்னார்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், மன்னார்குடி நகர், புறநகர், பேரையூர், நீடாமங்கலம், கோவில்வெண்ணி, எடமேலையூர், வடுவூர், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருமக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, திருத்துறைப்பூண்டி நகர், புறநகர், திருத்துறைப்பூண்டி பள்ளங்கோயில், கோட்டூர், முத்துப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் விண்ணப்பம் மூலம் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு செயற்பொறியாளர் (பொ) சம்பத் தெரிவித்துள்ளார்.
