- பொதுவுடைமைக்கட்சி
- பேராவூரணி
- பேராவூரணி கம்யூனிஸ்ட் கட்சி
- இந்தியா
- Nallakannu
- பேராவூரணி ஒன்றியம்
- வீரமணி
- மாவட்ட நிர்வாகக் குழு
பேராவூரணி, டிச.27: பேராவூரணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நூற்றாண்டு நிறைவு மற்றும் நல்லகண்ணு 101வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வீரமணி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கவிஞர் பாலசுந்தரம் கொடியேற்றினார்.
நிகழ்ச்சியில் விதொச மாவட்ட குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், ஒன்றியச் செயலாளர் சித்திரவேலு, இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலாளர் சுகுமார், விதொச ஒன்றிய தலைவர் கருப்பையா, நகரச் செயலாளர் மூர்த்தி ,செல்வராசு ,ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளைஞர் பெருமன்ற ஒன்றிய துணைச் செயலாளர் நீலகண்டன் நன்றி கூறினார்.
