இலுப்பூர் அருகே கிணற்றில் விழுந்த காளை மாடு மீட்பு

இலுப்பூர், டிச.27: இலுப்பூர் அருகே கிணற்றில் விழுந்த காளை மாட்டை இலுப்பூர் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இலுப்பூர் அருகே உள்ள ஆரிய கோண்பட்டியில் ஆறுமுகம் என்பவரின் தரைமட்ட விவசாய கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த காளை மாடு தவறி கிணற்றுள் விழுந்தது. இது குறித்து இலுப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற இலுப்பூர் தீயணைப்பு துறை வீரர்கள் கயிறு கட்டி காலை மாட்டை உயிருடன் மீட்டனர்.

 

Related Stories: