கந்தர்வகோட்டை, டிச.27: கந்தர்வகோட்டையில் பேழை திருச்சபையினர் பொதுமக்களுக்கு இனிபுகள் வழங்கி கிருஸ்துமஸ் கொண்டாடினர். இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளையே கிறிஸ்துமஸ் பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி அன்று உலக முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு கந்தர்வகோட்டை பெரிய அரிசிக்காரத்தெரு இயேசு கிறிஸ்துவின் பேழை திருச்சபை மக்கள் போதகர்.
டேவிட் சார்லஸ் தலைமையில் பெரியகடைவீதி, மாரியம்மன் கோயில்தெரு, உடையார் தெரு, இந்திராநகர், குமரன்நகர், எம். எம். நகர், மண்டேலா நகர், கறம்பகுடி சாலை, மற்றும் கிராமபுரங்களுக்கு கிறிஸ்து பிறப்பின் செய்தியை தெருக்களில் பவணியாக வந்து சந்தோஷத்தோடு இனிப்புகளை கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
பொதுமக்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கிருஸ்துமஸ் தாத்தா வேடம் அணித்து அனைவருக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் மதசார்பு அற்று அனைவரும் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியை நீதிராஜன்ஆனந்த் செய்து இருந்தார்.
