கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

கீழ்வேளூர், டிச.27: நாகை மாவட்டம் கீழையூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா, கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கட்சிக் கொடியினை மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டியன் ஏற்றி வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மாசேத்துங்,மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஹாஜாஅலாவுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் பாலாஜி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சபாபாதி, கண்ணதாசன், அறிவழகன், மோகன்தாஸ், சண்முகம்,பிரமானந்தம், சௌந்தரராஜன், செல்வம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: