வேதாரண்யம், டிச.27: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவிற்கு சீயோன் ஜெப ஆலய நிர்வாகி சந்திரமோகன் தலைமை வகித்தார். முன்னதாக கிறிஸ்துமஸ் விழா ஊர்வலத்தை பேரூர் திமுக செயலாளர் சுப்ரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுந்தர பிரபாகரன் உள்ளிட்டஏராளமான பொதுமக்கள், கிறிஸ்தவர்கள் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலைஞாயிறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. வழிநடகிலும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர் சிறுவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினர்.
