×

வேதாரண்யத்தில் சுனாமி 21ம் ஆண்டு நினைவு தினம்

வேதாரண்யம், டிச.26: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை கடற்கரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆறுகாட்டுதுறையில் சுனாமி 21ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுகாட்டுதுறை கடற்கரையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடலில் பால் ஊற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பிறகு சுனாமி நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர். இதேபோல் வேதாரணயம் நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில்திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். மவுன அஞ்சலி நிகழ்ச்சியில், மீனவர்கள், பொதுமக்கள் மீனவ பஞ்சாயத்தார், கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் கோடியக்கரை ,புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

 

Tags : anniversary of the tsunami in Vedaranyam ,Vedaranyam ,Arukattuthurai beach ,Nagapattinam ,anniversary ,tsunami ,Arukattuthurai ,Minister ,O.S. Manian ,Arukattuthurai beach.… ,
× RELATED வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் தப்பிக்க...