வடமதுரை, டிச. 27: வடமதுரை எஸ்ஐ பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பிலாத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள உப்புக்குளம் அருகே அனுமதியின்றி சிலர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் வாலிசெட்டிபட்டியை சேர்ந்த மாயவன் (36), மலைப்பட்டியை சேர்ந்த பெரிய பொன்னன் (28), வடமதுரையை சேர்ந்த மணிமாறன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 2 சண்டை சேவல்கள், ரொக்கம் ரூ.300ஐ பறிமுதல் செய்தனர்.
