கோவில்பட்டி, டிச. 27: கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரிசி பைகள் வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், அரிசி பைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் திருத்தல பேராலய பங்குத்தந்தை மோரிசன், உதவி பங்குத்தந்தை நிரோ ஸ்டாலின், ஆன்மிக தந்தை அந்தோனி ராஜ், ஜூடு சைமன், மாவட்ட பிரதிநிதி சிவா சுடலை, வடக்கு மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஜோக்கியம், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் அமலி பிரகாஷ், நகராட்சி கவுன்சிலர் ஜோஸ்மின் லூர்து மேரி, லூர்துராஜ், காமநாயக்கன்பட்டி கிளை செயளாளர் வினோத், திமுக இளைஞரணி அந்தோணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காமநாயக்கன்பட்டி ஆலயத்தில் பொதுமக்களுக்கு அரிசி பை வழங்கல்
- காமநாயக்கன்பட்டி சன்னதி கோவில்பட்டி
- கிறிஸ்துமஸ்
- காமநாயகன்பதி தூய பரலோக மாதா கோயில்
- கோவில்பட்டி
- ஆகாஷ் பாண்டியன்
- ஊம்பிற மாணவர்
- வடக்கு மாவட்டம்
