திருவாடானை, டிச. 27: திருவாடானை போலீசாருக்கு மாந்தாங்குடி கண்மாய் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சதீஷ் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் அள்ளி கொண்டிருந்த கும்பல் போலீசாரை கண்டதும் மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டரை எடுத்து கொண்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். உடனே போலீசார் சுதாரித்து அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஜேசிபி டிரைவர் கீழ்பனையூரை சேர்ந்த வைரவமூர்த்தி (28), அரியாங்கோட்டையை சேர்ந்த அகிலன் (21), நந்தக்கோட்டையை சேர்ந்த ராமமூர்த்தி (38), கூடலூரை சேர்ந்த சிலம்பரசன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து ஜேசிபி இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்தனர். ெதாடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
