நித்திரவிளை, டிச.27: கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (38), ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இரவு தனது ஆட்டோவை வீட்டின் முன் சாலையோரம் நிறுத்தி இருந்தார். அப்போது களியக்காவிளை நோக்கி வந்த சொகுசு கார் அந்த பகுதியில் நின்ற மின்கம்பத்தில் மோதி விட்டு, ராஜேஷின் ஆட்டோவில் மோதி சாலையில் கவிழ்ந்தது. சொகுசு கார் மோதியதில் ஆட்டோ மற்றும் மின்கம்பம் சேதமடைந்தது. இது சம்பந்தமாக ராஜேஷ் கொடுத்த புகார் மீது சொகுசு கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேவேளையில் சொகுசு கார் சாலையில் கவிழ்ந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த இருவர் பலத்த காயமடைந்து பாறசாலை அரசு மருத்துவமனை மற்றும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
