தக்கலை அருகே வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி

தக்கலை.டிச.27: தக்கலை அருகே காரில் வந்தவரை தாக்கி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். நட்டாலம் வெட்டுக்காட்டுவிளையைச் சேர்ந்தவர் முருகன்(42). இவர் தனது காரில் சிராயன்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் .பள்ளியாடி அருகே உள்ள குருவிழைக்காடு காலனி பகுதியில் வரும்போது, அப்பகுதியை சேர்ந்த அபீஸ் என்பவர் காரை தடுத்து நிறுத்தி முருகன் பாக்கெட்டில் இருந்து பணத்தை பறிக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது காரின் முன் பகுதியை கல்லால் சேதப்படுத்தியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக முருகன் தக்கலை போலீசில் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிஸை கைது செய்தனர் .

Related Stories: