ஒரத்தநாடு அருகே அரசு பள்ளியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

ஒரத்தநாடு, டிச.25: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பரிதிக் கோட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் கிறிஸ்துமஸ் தாத்தா ஆடல், பாடலுடன் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் கேக் வழங்கினார். இதில், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Related Stories: