வடலூர், டிச. 25: ஒன்றிய அரசு அமல்படுத்திய தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தியும், மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. வடலூரில் மாவட்ட சிஐடியு இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்காதே உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வடலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுவித்தனர். மேலும் 13 பெண்கள் உள்பட 32 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
