×

நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார்… முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக அறிவுரை வழங்கினார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார்.  சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதங்களே உள்ளதால் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை வீடுகள் தோறும் சென்று விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் தமிழ்நாட்டின் 15 சதவீத வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட பார்ம்-6 நிரப்பிக் கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும்.

அடுத்ததாக புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். போலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்மை நேர்மையாக-நேர்வழியில் வீழ்த்த முடியாத பாசிச சக்திகளும்-எதிரிகளும், குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள். அதற்கு நாம் கடுகளவுகூட இடம் தரக்கூடாது. நம் கூட்டணி தான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரைக்கும் கவனம் சிதறாமல் உழைக்க வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை அப்போது வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Tags : Nannilam ,Mayiladuthurai ,Poompuhar… ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Poompuhar ,Anna Arivalayam ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை