- காங்கிரஸ் கிறிஸ்தும
- சத்யமூர்த்தி பவன், சென்னை
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
- கிறிஸ்துமஸ் விழா
- சத்யமூர்த்தி பவன்
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- சத்யமூர்த்தி பவன்
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கேக்வெட்டி வெகுவிமர்சையாக கொண்டாடினர். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர். சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கிறிஸ்துமஸ் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, மாநில செயற்குழு உறுப்பினரும் விழா குழுத் தலைவருமான ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். விழாவில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘கிறிஸ்தவம் அன்பைப் போதிக்கிறது, நாம் அனைவரும் அன்பை நேசிப்போம்’. ஒவ்வொருவரையும் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக எண்ணுவோம், இயேசு கிறிஸ்து, தன்னை ஒருவர் காட்டிக்கொடுக்கப் போகிறார் என்று தெரிந்த பிறகும் அமைதியாகவே இருந்தார். அதுதான் இயேசுவின் மகத்தான தன்மை. கிறிஸ்தவம் என்பது எல்லோரையும் நல்வழிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் மத நல்லிணக்கம் என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது, என்றார்.
மேலும் விழாவில், ஈ.சி.ஐ திருச்சபை பேராயர் கதிரொளி மாணிக்கம், சி.எஸ்.ஐ சென்னை பேராயத்தின் துணைத் தலைவர் ஜெயசீலன் ஞானாதிக்கம் உள்ளிட்ட பேராயர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சொர்ண சேதுராமன், அமைப்புச் செயலாளர் ராம்மோகன், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.எஸ். திரவியம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி.வி. சேவியர், டி.என்.டி. சார்லஸ், விழா குழு பொருளாளர் வி.எஸ். ஜெபராஜ், மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
