×

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் கூற முடியாது: அமைச்சர் சேகர்பாபு கிண்டல் பேச்சு

அம்பத்தூர்: காமராசர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1260 மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் விழாவில் பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் கூற முடியாது என அமைச்சர் சேகர்பாபு கிண்டலாக கூறியுள்ளார். அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராசர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 பள்ளிகளில் பயிலும் 1260 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராசர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 581 மாணவிகளுக்கும், ராமசாமி மேல்நிலைப் பள்ளியில் 182 மாணவர்களுக்கும், 130 மாணவிகளுக்கு மிதி வண்டியும், முகப்பேர் அரசு பள்ளிக்கு 180 மிதி வண்டியும், கொரட்டூர் அரசு பள்ளிக்கு 80 மிதிவண்டியும், அத்திப்பட்டு அரசு பள்ளிக்கு 107 மிதிவண்டி என மொத்தம் 1260 மிதிவண்டிகள் நேற்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் பகுதி செயலாளர் எம்.டி.ஆர் நாகராஜ் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் பேசுகையில், பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் கூற முடியாது. அசிங்கமாக பேசுவது அரசியல் என்றால் அது எனக்கு வராது. அதே புஸ்ஸி, அதே லாட்டரி, அதே பஞ்ச் டயலாக், ஊர் ஊரா போய் கூட்டம் நடத்துவது தான் தவெக. ஊர் முழுவதும் கூட்டம் நடத்துவது திமுக. பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொன்னால் நன்றாக இருக்காது, என்றார்.

மேயர் பிரியா பேசுகையில், சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகளில் மிதிவண்டி வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெண் சமுதாயம் முன்னேற கலைஞரும், முதலமைச்சர் ஸ்டாலினும் மிதிவண்டி வழங்கி படிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். முதலமைச்சர் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக விடியல் பயணம் திட்டம் புதுமைப்பெண் திட்டம். அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் படிப்பு தான் உங்களுக்கு கை கொடுக்கும் தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வேறு எந்த மாநிலமும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, என்றார்.

Tags : Coral Festival Party ,Palwadi Party ,Minister ,Sekarbabu ,Ambattur ,Kamarasar Government Women's Secondary School ,Government of Perundalaivar Kamarasar ,
× RELATED திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்...