- தவெகா
- புண்டை... வெறுப்பு...
- செங்கோட்டையன்
- ஜென்சி
- ஈரோடு
- சுங்கசாவடி
- விஜயமங்கலம்
- பெருந்துறை, ஈரோடு மாவட்டம்
- பொதுச்செயலர்
- புஸ்ஸி ஆனந்த்
- பிரதம செயலாளர்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே தவெக பிரசார கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதையடுத்து கூட்டம் நடக்கும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நேற்றுமுன்தினம் இரவு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் தொண்டர்கள் புஸ்ஸி ஆனந்தை வரவேற்றனர். அங்கு தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவிப்பதற்காக பெரிய அளவிலான மாலை ஒன்றை கொண்டு வந்தனர்.
இதை பார்த்த ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி, அவர்களை தடுத்து நிறுத்தி, ‘நான் தான் மாவட்ட செயலாளர், என்னிடம் அனுமதி வாங்காமல் எப்படி மாலை அணிவிக்கலாம்’ என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு தர்மபுரி, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டதோடு இருதரப்பினர்க்கும் கைகலப்பு உருவாகும் நிலை ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததை கண்ட புஸ்ஸி ஆனந்த் இரு தரப்பினரையும் அமைதியாக இருக்கும்படி கூறினார். ஆனால், புஸ்ஸி ஆனந்த் பேச்சை யாரும் கேட்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேறு வழி தெரியாமல் திருப்பூர் மாவட்ட நிர்வாகி கொண்டு வந்திருந்த மாலையை, நிர்வாகி கழுத்திலேயே அணிவித்து விட்டு அங்கிருந்து புஸ்ஸி புறப்பட்டு சென்றார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த அந்த நிர்வாகி மாலையை தூக்கி எறிந்தார். மேலும், கீழே விழுந்த மாலையை மீண்டும் கையில் எடுத்து அந்த நிர்வாகி தூக்கி கூட்டத்தின் மத்தியில் வீசினார். இச்சம்பவங்களை எல்லாம் நேரில் பார்த்துக்கொண்டிருந்த செங்கோட்டையன் என்ன நடக்கிறது, என்ன செய்வது என தெரியாமல் சிறிது நேரம் அப்படியே திகைத்து போய் நின்றிருந்தார்.
கட்சி நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்திற்கு மாலை அணிவிக்கவும், சால்வை அணிவிக்கவும் முண்டியடித்து ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக்கொண்ட நிலையில் அருகில் நின்ற செங்கோட்டையனை நிர்வாகிகள் யாரும் கண்டுகொள்ளாதது அவரை அதிருப்தியடையச் செய்தது. தவெகவினரின் இந்த தகராறு காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ‘அதிமுகவில் எவ்வளவு மரியாதையோடு இருந்த செங்கோட்டையனின் இன்றைய நிலையை பாருங்கள் எனவும், ஜென்சி கூட்டம் அதிகம் உள்ள தவெகவினருக்கு அரசியல் புரிதல் எப்போது தான் வருமோ’ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
