டெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அறிக்கை அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 மே 2026க்குள் அறிக்கை தர வேண்டும் என்று விசாரணை ஆணையத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க 2023ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்துக்கு இதுவரை 4 முறை கால அவகாசத்தை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. கடந்த மே மாதம் வழங்கிய கால நீட்டிப்பில் நவ. 20க்குள் அறிக்கை தர ஒன்றிய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்த நிலையில் மணிப்பூரில் The குடியரசுத் தலைவர் ஆட்சி பிப்.3 முதல் நடைபெறகிறது. மணிப்பூர் இன கலவரத்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்
