திருப்பூர், டிச.17: திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் அவசர பிரிவில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் பாதிக்கப்பட்டவர்களோடு முண்டியடித்து சிகிச்சை அறைகளுக்குள் செல்வதால் அங்கு பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இதனை தவிர்ப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவு முன்பாக இரும்பு கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியில் உள்ள ஊழியர்கள் நோயாளியுடன் ஒருவரை மட்டுமே உள்ளே அனுமதிக்கும் வகையில் இரும்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையூறு இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என கூறப்படுகிறது.
