×

தமிழக வாழ்வுரிமை கட்சி தெருமுனை கூட்டம்

திருக்கழுக்குன்றம், மார்ச் 14: செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்தகளத்தூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் 15ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் செங்கல்பட்டு மண்டல செயலாளர் ஆர்.டி.சுரேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால்வளவன், தொழிலாளர் வழ்வுரிமை சங்க மாநில பொதுச்செயலாளர் ஜம்புலிங்கம், தொழிலாளர் வழ்வுரிமை சங்க துணை பொதுச்செயலாளர் சிதம்பரம், மாநில துணை பொதுச்செயலாளர் வேணுகோபால், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியை மேற்கொள்வது, கட்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பொன்விளைந்த களத்தூர் கிளை செயலாளர்கள் யோகேஷ், அஜித்குமார், கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Tamil Nadu Vazhuvrimai Party Street Meeting ,Thirukkazhukundram ,Ponvilainthakalathur, Chengalpattu district ,Tamil Nadu Vazhuvrimai Party ,Chengalpattu ,regional secretary ,R.D. Suresh ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்