×

வண்டலூர் அருகே ரூ.10.90 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல்

கூடுவாஞ்சேரி, மார்ச்.12: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கண்டிகை-வேங்கடமங்கலம் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் முதல்வரின் உத்தரவின் பேரில், ரூ.10.90 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தாம்பரம் ஆர்டிஓ முரளி தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணை தலைவர் ஏவிஎம் இளங்கோவன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டிகை துணை மின் நிலைய உதவி பொறியாளர் சசிகுமார் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பார்களாக செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் இதயவர்மன் ஆகியோர் கலந்துகொண்டு மேலக்கோட்டையூர், ஊத்துக்குழி, வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம், கண்டிகை, விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பு, வெங்கப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.10.90 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினர்.
இதில், மேலைக்கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமி ஆறுமுகம், நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், துணை தலைவர் ஹேமமாலினி வாசு, செங்கல்பட்டு மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன், மறைமலைநகர் உட்கோட்ட செயற்பொறியாளர் மாணிக்கவேலன், மாம்பாக்கம் உதவி செயல் பொறியாளர் சந்தானகுமார், வண்டலூர் வட்ட துணை தாசில்தார் சுகுமார், விஏஓ தணிகாசலம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Vandalur ,Kuduvanchery ,Kandigai-Venkatamangalam road ,Chengalpattu district ,Chief Minister ,Bhoomi Puja ,
× RELATED மாமல்லபுரம் அரசு மருத்துவமனை சாலையை ஆக்கிரமித்து பைக்குகள் நிறுத்தம்