×

பாபநாசத்தில் மரம் விழுந்து ஒருவர் படுகாயம்

தஞ்சாவூர், டிச.16: பாபநாசத்தில் சாலையில் மரம் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்ப பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரம் ஒன்று தஞ்சாவூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் பாபநாசம் வங்காரம்பேட்டை மெயின் ரோட்டில் கீழே விழுந்தது.

இந்நிலையில் பாபநாசம் திருப்பாலைத்துறைசேர்ந்தவர் ஜாபர் அலி (52). இவர், பைக்கில் வந்து கொண்டிருந்தபோது எதிராராமல் மரம் அவர் மீது விழுந்து. இதில் ஜாபர் அலியில் இடது கையில் பலத்த காயம் ஏற்படட்து. அக்கம் பக்கத்தினர் ஜாபர் அலியை மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. சாலையில் மரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மரம் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Thanjavur ,Babanasam ,Thanjavur District ,Babanasam Government Men's Secondary School ,
× RELATED அதீத பனி மூட்டத்தின்போது பாதுகாப்பான விமான சேவை அளிப்பது எப்படி?