×

அந்திச்சூரியன் தஞ்சாவூரில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்

தஞ்சாவூர். டிச. 16: இ-பைலிங் முறையை ரத்து செய்ய வேண்டும். வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியும் ஒன்றிய அரசின் இபைலிங் முறையை ரத்து செய்யக்கோரி நகலை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற சுற்றறிக்கையின்படி இ-பைலிங் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல், குறைபாடுகளால் வழக்குரைஞா்கள், வழக்காடிகள் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இ-பைலிங் முறையிலுள்ள குறைபாடுகளைச் சரிசெய்யும் வரை கட்டாய இ-பைலிங் முறையை திரும்பப்பெற வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்க வேண்டும். வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தினர் தலைவர் திராவிட செல்வன் தலைமையில் நீதிமன்றத்தை புறக்கணித்தனர். வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசு கொண்டு வந்த இ- பைலிங்க் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Thanjavur ,Union government ,
× RELATED பைக் மோதி மூதாட்டி பலி